முடங்கியது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம். 1 மணி நேரத்தில் RS.24,000 கோடியை இழந்த மார்க் ஜுக்கர்பெர்க் – அறிக்கை வெளியிட்ட ப்ளூம்பெர்க் நிறுவனம் !தற்போதுள்ள நிலையில் சமூகவலைதளங்களின் பயன்பாடு என்பது அபரிவிதமாக வளர்ச்சியடைந்துள்ளது. மேலும் இதனை பயன்படுத்தாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்ற நிலையில் தற்போதுள்ள இளம் தலைமுறையினர் இருக்கின்றனர். இதனால் படிப்பு மற்றும் இதர விஷயங்களில் கவனம் செலுத்தாமல் முழுநேரமும் சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
இந்த நிலையில் நேற்று உலகம் முழுவதும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாக்ராம் போன்றவை செயல்படவில்லை. இதனால் ஏற்பட்ட விளைவு குறித்து மெட்டா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கோடிக்கணக்கில் இழந்த மார்க் ஜுக்கர்பெர்க் :
சர்வர்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகம் முழுவதும் மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாக்ராம் சமூக வலைதள சேவைகள் முடங்கியது. இதனால் பயனர்கள் சம்மந்தபட்ட தளங்களின் சேவைகளை பயன்படுத்த முடியாமல் அவதியடைத்தனர்.
‘வில்லேஜ் ஃபுட் பேக்டரி’ சேனலில் ஆபாச படங்கள் – அதிர்ந்து போன ஃபாலோவர்ஸ்.., விளக்கம் கொடுத்த டாடி ஆறுமுகம்!!
சுமார் ஒன்றரை மணி நேரம் ஏற்பட்ட முடக்கத்தால் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் ரூ. 24,900 கோடியை இழந்துள்ளதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.