தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் பெரும்பாலான மக்கள் சோசியல் மீடியாவில் மூழ்கி இருக்கிறார். குறிப்பாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை கிட்டத்தட்ட கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறது. இந்த இரண்டு சமூக வலைதளங்களை மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு தான் வாட்சப் வலைத்தளத்தையும் மெட்டா நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிறுவனத்தில் மார்க் ஜூக்கர்பர்க் தலைமை பொறுப்பில் வகித்து வருகிறார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் நேற்று இரவு ஒரு மணி நேரம் உலக முழுவதும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் என இரண்டு சமூக வலைதளங்களும் முடங்கியது. இதனால் மக்கள் சற்று குழப்பத்தில் இருந்து வந்தனர். இதனை தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்து மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. இதனால் அந்த நிறுவனத்துக்கு பங்கு சந்தை சரிவை சந்தித்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நேற்று ஒரு மணி நேரம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முடங்கி போனதால், அதிபர் மார்க் ஜூக்கர்பர்க் $3 பில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.25,000 கோடி) சந்தை மதிப்பை இழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும் உலகத்தின் 4வது பணக்காரராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.