நடிகை பிரியா பவானி சங்கர்
தென்னிந்திய தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தனக்கான ஒரு ரசிகர்கள் கூட்டத்தை கவர்ந்த நடிகை தான் பிரியா பவானி சங்கர். தற்போது இவர் நடிப்பில் இந்தியன் 2, டிமாண்டி காலனி 2 உள்ளிட்ட படங்களில் அடுத்ததடுத்து நடித்து வருகிறார். மேலும் பல வெற்றி படங்களில் அவர் நடிப்பு அதிகம் பேசப்பட்டதால் அவருடைய வீட்டு வாசல் முன்பு இயக்குனர்கள் தவமாய் தவம் கிடக்கின்றனர். சினிமா ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் தனது நீண்ட நாள் காதலனுடன் டைம் ஸ்பென்ட் பண்ணி வருகிறார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பிரியா பவானி சங்கர் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம் சினிமாவில் ரொமான்ஸ் காட்சிகள் வரும் என்றால் நீங்கள் எந்த நடிகருடன் லிப் லாக் கிஸ் கொடுப்பீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் சற்றும் யோசிக்காமல், சினிமாவில் ரொமான்ஸ் காட்சிகள் இடம்பெற்றால் அல்லு அர்ஜூனுடன் லிப் லாக் கிஸ் அடிக்க ஒப்புக் கொள்வேன் என்று ஓப்பனாக பேசியுள்ளார். அவர் பேசியது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.