விக்னேஷ் சிவன் – நயன்தாரா
தென்னிந்திய தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுபவர் தான் நடிகை நயன்தாரா. தற்போது இவர் பாலிவுட்டில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் டெஸ்ட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையில் அவர் விக்னேஷ் சிவனை கடந்த 2022ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண் மகன்கள் உள்ளன. இதனை தொடர்ந்து நயன் சோசியல் மீடியாவில் படு பிஸியாக இருந்து வருகிறார். அதன்படி கணவர் மற்றும் குழந்தைகளுடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இதற்கிடையில் “9 ஸ்கின்” என்ற மேக்கப் நிறுவனத்தையும் ஆரம்பித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை நயன் unfollow செய்ததால், அவர்கள் பிரிந்து விட்டதாக பரவலாக பேசப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவரும் இருக்கும் வீடியோ வெளியாகி வைரலானது. இந்நிலையில் மீண்டும் இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு அதிர்ச்சி பதிவை பதிவிட்டுள்ளார் நயன். அதாவது, நயன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் (I’m lost) அதாவது நான் இழந்து விட்டேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை இருவரும் பிரிய போகிறார்களா? என்று பதிவிட்டு வருகின்றனர்.