அதிமுகவிடம் டீல் பேசிய பாஜக. அதிமுக பாஜக கூட்டணி அமைப்பதில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தான் பிரச்சனை என்றால் அவரையும் மாற்ற தயாராக இருப்பதாக அதிமுகவிற்கு பாஜக உத்தரவாதம் அளித்தும் அதனை எடப்பாடி பழனிச்சாமி ஏற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS
அதிமுக – பாஜக கூட்டணி :
தமிழகத்தில் நீடித்த அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உடைத்த நிலையில் இரு கட்சிகளும் தனி அணி கட்டமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் தென் மாநிலங்களில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் முழுமையாக புறக்கணிக்கப்படும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிப்பதால் தங்கள் கூட்டணியை பலப்படுத்த பாஜக முயற்ச்சிகள் மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் அதிமுக கூட்டணியை புதுப்பிக்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக இதுவரை ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் போன்றவர்களை கூட்டணியில் சேர்க்காமல் பாஜக புறக்கணித்து வருகிறது.
பாஜக பேச்சுவார்த்தை:
மேலும் எடப்பாடி பழனிச்சாமியை சமாதானபடுத்தும் நோக்கில் பாஜக மேலிட தலைவர்கள் தொடர்ந்து முயற்ச்சித்து வருகின்றனர். இதன் காரணமாக டெல்லியில் இருந்து வரும் அழைப்புகளை எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது.
சச்சின், கோலி சாதனைகளை முறியடித்த ஜெய்ஷ்வால் ! கிரிக்கெட் ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளிய இளம் வீரர் – குவியும் பாராட்டு !
இதனால் அதிமுக மூத்த தலைவர்களையும், முன்னாள் அமைச்சர்களையும் தொடர்புகொண்ட பாஜக முக்கிய பிரமுகர்கள் அதிமுக கூட்டணி குறித்த முடிவை தெரிவிக்க வேண்டும் என்றும், மேலும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தான் பிரச்சனை என்றால் அதனையும் சரி செய்துகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து நாங்கள் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க போவதில்லை என்றும் அதிமுக தலைமையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.