சுட்டுக் கொலை
மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு கட்சியும் கூட்டணி குறித்து விவாதம் செய்து கொண்டிருக்கின்றன. இன்னும் பலர் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் பாஜக தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்பூர் பகுதியைச் சேர்ந்த பிரமோத் யாதவ் என்பவர் பா.ஜ.க. விவசாய சங்க மாவட்டத் தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில்,இவர் இன்று (07-03-24) காலை தன்னுடைய வீட்டில் காரில் கிளம்பி வெளியே சென்றுள்ளார்.
ஒரு பாதையில் அவர் சென்று கொண்டிருந்த போது திடீரென பைக்கில் வந்த சில மர்ம நபர்கள் அவரின் காரை நிறுத்தி உள்ளனர். அப்போது யார் என்னவென்று தெரியாமல் பிரமோத் யாதவ் திகைத்து போய் இருந்த சமயத்தில் மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தள்ளினர். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று ,மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறை வழக்கு பதிவு செய்த கொலையாளிகளை தேடி வருகின்றனர். இப்படி பட்டப்பகலில் பாஜக தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.