தென்னிந்திய டாப் ஹீரோ
தென்னிந்திய தமிழ் சினிமாவில் டாப் 5-வில் வர வேண்டும் என்று பல முன்னணி நட்சத்திரங்கள் போட்டி போட்டு வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் தியேட்டர்கள் இழுத்து மூடப்பட்ட நிலையில், மாஸ்டர் படத்தின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார் விஜய். அந்த படத்திற்கு பிறகே தியேட்டரில் 100 சதவீதம் உட்காரலாம் என சொல்லப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா கால கட்டத்திற்கு பிறகு தற்போது வரை படங்களை கொடுத்து பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனில் டாப் 5-வில் இருக்கும் தென்னிந்திய நடிகர்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
5. நடிகர் அஜித், வலிமை மற்றும் துணிவு என இரண்டு படங்களை கொரோனாவுக்கு பின் கொடுத்துள்ளார். அதன் மொத்த வசூல் 364 கோடி ஈட்டியுள்ளது, அதே போல் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு இரண்டு படங்களை நடித்து 355 கோடி கலெக்ஷனையும் பெற்றுள்ளனர். அதுமட்டுமின்றி அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 365 கோடி கலெக்ட் செய்துள்ளதால், இந்த மூவரும் 5ம் இடத்தை பிடித்துள்ளனர்.
4. சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் கொரோனாவுக்கு பின் மூன்று படங்கள் நடித்துள்ளார். அதன் மூலம் 415 கோடி எடுத்துள்ளார்.
3. பாகுபலி மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமான பிரபாஸ் ராதே ஷ்யாம், ஆதி புரூஸ், சலார் போன்ற படங்களில் நடித்து 1157 கோடி வசூலை தாண்டி முன்னையில் இருந்து வருகிறார். அதே போல் KGF பட மூலம் நடிகர் யாஷ் உலக அளவில் 1230 கோடி வசூலித்து இருவரும் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
2. பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கிய RRR திரைப்படம் உலக அளவில் 1275 கோடி கிராஸ் செய்து ராம்சரண் மற்றும் ஜூனியர் NTR இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.
1. “ஆல் ஏரியாவிலும் ஐயா கில்லிடா” என்ற வசனத்திற்கேற்ப, முதல் இடத்தில் கெத்தாக இருந்து வருகிறார் தளபதி விஜய். இவர் நடித்த மாஸ்டர், பீஸ்ட், வாரிசு, லியோ போன்ற படங்கள் மொத்தமாக கிட்டத்தட்ட 1390 கோடி வசூலை பெற்று தென்னிந்தியாவிலேயே டாப் ஒன் இடத்தை பிடித்திருக்கிறார் தளபதி விஜய் விளங்கி வருகிறார்.