தவெக கட்சியின் சின்னம் என்ன?.., எப்போது வெளியீடு? .., அரசியலில் கொளுத்தி போடும் தலைவர் விஜய்!! தவெக கட்சியின் சின்னம் என்ன?.., எப்போது வெளியீடு? .., அரசியலில் கொளுத்தி போடும் தலைவர் விஜய்!!

தவெக கட்சியின் சின்னம்

நடிகர் விஜய் கடந்த மாதம் 2ம் தேதி தன்னுடைய மக்கள் இயக்கத்தை “தமிழக வெற்றிக் கழகம்” என்று கட்சியாக மாற்றினார். மேலும் கட்சி தலைவராக உறுதிமொழி எடுத்துக் கொண்டு வருகிற 2026ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டி போட போவதாக அறிவித்திருந்தார். மேலும் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 8) அன்று உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை தலைவர் விஜய் அறிமுகம் செய்த நிலையில் கிட்டத்தட்ட 50 லட்சம் பேர் தவெக கட்சியில் உறுப்பினராக சேர்ந்துள்ளதாக கட்சி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் விஜய் 2 கோடி பேர் உறுப்பினராக சேர்ப்பது தான் நம்முடைய இலக்கு என்று தெரிவித்த நிலையில், அதற்காக கட்சி உறுப்பினர்கள் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து கட்சியின் சின்னம் மற்றும் நிறம் குறித்து மாநாட்டில் வெளியிடுவார்கள் என மக்கள் எண்ணிய நிலையில், தற்போது இது குறித்து சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தவெக கட்சியின் சின்னம், நிறம் உள்ளிட்டவைகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் செயலி போன்று வீடியோ மூலம் தலைவர் விஜய் வெளியிடுவார் என சொல்லப்படுகிறது. எனவே விஜய்யின் கட்சி சின்னம் என்னவாக இருக்கும் என்று பலரும்  எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். 

தடம் புரண்ட ரயில்.., பலியான எண்ணிக்கை?.., அலறியடித்த பயணிகள்.., என்ன நடந்தது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *