மீண்டும் தமிழகம் வருகிறார் மோடி. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழகம் வந்த பிரதமர் மோடி கோவையில் பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பிறகு மதுரைக்கு சென்ற அவர் மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு தனியார் ஹோட்டலில் தங்கி ஓய்வெடுத்த பின் அடுத்தநாள் திருநெல்வேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மீண்டும் தமிழகம் வருகிறார் மோடி :
பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் 15, 16 மற்றும் மார்ச் 18 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அடிப்படையில் மார்ச் 15 ஆம் தேதி சேலம் வரும் பிரதமர் அங்கிருந்து மார்ச் 16 ஆம் தேதி கன்னியாகுமரி செல்லவுள்ளதாகவும் அதன் பிறகு மார்ச் 18 ஆம் தேதி கோவையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ! பாஜகவுடன் கைகோர்த்த பாமக மற்றும் தேமுதிக – பேச்சுவார்த்தையில் இறங்கிய தமிழக பாஜக !
கடந்த சில நாட்களில் 2 முறை தமிழகம் வந்த பிரதமர் மோடி தற்போது 3 வது முறையாக தமிழகம் வருவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.