தேர்தல் பத்திர விவகாரம்
மக்களவை தேர்தல் கூடிய விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்ட “தேர்தல் பத்திரம்” என்ற திட்டத்தின் மூலம் இதுவரை பத்திரம் செய்யப்பட்ட விவரங்களை வருகிற மார்ச் 6ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று SBI வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஏனென்றால் “தேர்தல் பத்திரம்” ஏகப்பட்ட முறைகேடுகள் ஏற்பட்டுள்ளதால் தான் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது. ஆனால் தங்களுக்கு ஜூன் மாதம் வரை கால அவகாசம் வேண்டும் என்று SBI வங்கி சார்பாக கோரிக்கை வைத்து மனு தாக்கல் செய்யப்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து இந்த மனு இன்று நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், தேர்தல் பாத்திரம் தொடர்பான விவரங்கள் எல்லாம் மும்பையில் உள்ள எஸ்பிஐ மத்திய வங்கிக்கு தான் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதனால் SBI வங்கிக்கு என்ன சிரமம் வந்துவிட போகிறது. உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 26 நாட்களாக என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என சரமாரியாக கேள்விகளை நீதிபதி முன்வைத்தார். எனவே தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை நாளை மாலைக்குள் வெளியிட எஸ்.பி.ஐ. வங்கிக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.அதுமட்டுமின்றி இந்த விவரங்களை தேர்தல் ஆணையம் தங்களுடைய அதிகாரபூர்வ வலையதளத்தில் வருகிற 15ம் தேதி மாலை 5 மணிக்குள் வெளியிட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.