பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம். முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் பொன்முடி. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இருவருக்கும் தண்டனையை நிறுத்தி வைத்துவிட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மீண்டும் அமைச்சராகும் பொன்முடி :
சொத்துகுவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் பொன்முடியின் தொகுதியான திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் தனக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். பொன்முடியின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்தது மட்டுமல்லாமல் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இனி அனைத்து டாஸ்மார்க்கிலும் டிஜிட்டல் பேமென்ட் ! கூடுதல் கட்டணம் வாங்க முடியாது என கருத்து – மகிழ்ச்சியில் மதுப்பிரியர்கள் !
இதனால் பொன்முடி மீண்டும் MLA வாக தொடர்வது உறுதியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர் மீண்டும் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்படவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.