குக் வித் கோமாளி சீசன் 5ல் இந்த பிரபலம் தான் நடுவரா?.., வெளியான ஷாக்கிங் தகவல்?.., செட் ஆகுமா?குக் வித் கோமாளி சீசன் 5ல் இந்த பிரபலம் தான் நடுவரா?.., வெளியான ஷாக்கிங் தகவல்?.., செட் ஆகுமா?

குக் வித் கோமாளி சீசன் 5

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மக்களை மிகவும் கவர்ந்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். இதுவரை நான்கு சீசன்கள் முடிந்துள்ளது. சீசன் 5க்காக தற்போது ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த ஷோவில் இருந்து திடீரென வெளியேற போவதாக  நடுவர்  செஃப் வெங்கடேஷ் பட்  அறிவித்தார். அவர் மட்டுமின்றி செஃப் தாமுவும் வெளியேறுவதாக வீடியோ வந்தது. ஆனால் இந்த வீடியோவை அடுத்த சில நாட்களில் நீக்கி விட்டனர்.

இவர்களை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியோட இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் விஜய் டிவியில் இருந்து விலக போவதாக அறிவித்திருந்தனர் குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் தற்போது முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது,  குக் வித் கோமாளி சீசன் 5ல் செஃப் தாமு நடுவராக தொடர்வார் என்றும், அவருடன் நடிகர் சுரேஷ் நடுவராக வர இருக்கிறார் என தகவல் பரவி வருகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. கடந்த சீசன்களில் ஒரு சில எபிசோடுகளில்  நடிகர் சுரேஷ் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

யுவன் டைவர்ஸ் செய்த மனைவிகளை பார்த்துள்ளீர்களா?.., அட., இவ்வளவு அழகா இருக்காங்களே?.., புகைப்படம் உள்ளே!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *