அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையம். ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பயன்பெறும் வகையில் செயற்கை கருத்தரித்தல் மையங்கள் வசதி இனி அரசு மருத்துவ மனைகளிலும் அமைக்கப்பட உள்ளன.அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு வருவதாக மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையம்
அறிவியல் பெருகி விட்ட இந்த காலத்தில் உலகத்தில் எங்கு நோக்கினாலும் குழந்தையின்மை பிரச்சனை தான் உள்ளது. இயற்கை மாறி செயற்கை உருமாறி கொண்டு உள்ளது. தற்சமயம் உலகத்தில் பலரும் இந்த செயற்கை கருத்தரித்தல் முறையில் குழந்தை பெற்று கொள்ளும் நிலை வந்து விட்டது. ஆனால் இந்த செயற்கை முறையில் குழந்தை பெற்று கொள்வது பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம். காரணம் இதற்கு லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இது எட்டாக்கனியாகவே இருந்தது. ஆனால் அதற்கெல்லாம் முற்று புள்ளி வைக்கும் வகையில் அரசு மருத்துவ மனைகளில் இந்த சேவை நடைமுறைக்கு வரவுள்ளது.
இது குறித்து மதுரை அண்ணா நகரை சேர்ந்த வெரோனிகா மேரி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர்” தமிழ்நாட்டில் செயற்கை கருத்தரித்தல் முறையில் குழந்தை பெற்று கொள்வது அதிகரித்து உள்ளது. ஆனால் இந்த சிகிச்சை வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று. இதற்கு செலவு செய்வது என்பது ஏழைகளுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. அதனால் இந்த வசதியை அனைத்து அரசு மருத்துவ மனைகள், மாவட்ட தலைமை மருத்துவ மனைகளில் ஏற்படுத்த உத்தரவு இடவேண்டும்” என்று கூறியிருந்தார்.
பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம் ! MLA வாக தொடர்வது உறுதியாகியுள்ளது – பொன்முடி மீண்டும் அமைச்சராக வாய்ப்பு !
இந்த வழக்கானது நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல் ஆஜராகி, “செயற்கை கருத்தரித்தல் மையம் சென்னை எழும்பூர் அரசு மருத்துவ மனைகளில் அமைக்கப்பட்டு உள்ளது. அதற்கான உபகரணங்கள் வாங்கியதும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். இதே போன்ற சிகிச்சை மையம் மதுரை அரசு மருத்துவ மனையில் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அனுமதி கிடைத்ததும் மதுரையிலும் இது அமைக்கப்படும். மேலும் நிதி நிலைமைக்கு ஏற்ப தமிழகத்தில் தேவையான இடங்களில் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்” என்று கூறினார்.
இதை ஏற்று கொண்ட நீதிபதிகள் மனுதாரரின் கோரிக்கை நிறைவேறும் வகையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனால் மேல் முறையீடு இல்லாமல் இந்த வழக்கு முடித்து வைக்கப்படுவதாக நீதிபதிகள் கூறினார். அதனால் விரைவில் அரசு மருத்துவமனைகளில் ஏழைகளுக்கு இந்த வசதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.