ஆனந்த் அம்பானிக்கு இப்படி ஒரு நோயா. ஆசியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் தான் ஆனந்த் அம்பானி. அவர் தனது உடல் எடையை 108 கிலோவில் இருந்து குறைத்து பின்னர் மீண்டும் அதே பழைய உடல் அமைப்போடு மாறிவிட்டார். ஒரு ஆரோக்கியமான உடல் எடை குறைப்பு செய்தும் மறுபடியும் அவர் அதிக எடை போட காரணம் என்ன? இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆனந்த் அம்பானிக்கு இப்படி ஒரு நோயா
உலக பணக்காரர்கள் பட்டியலில் தவிர்க்க முடியாத இடத்தில் இருப்பவர் தான் திரு.முகேஷ் அம்பானி அவர்கள். அவரது மகன் ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டு வருகிறது. ஏற்கனவே ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட்டிற்கும் நிச்சயதார்த்தம் முடிந்தது. அவர்களது திருமணம் வருகிற ஜூலை மாதம் நடைபெற இருக்கும் நிலையில் மார்ச் 1 ம் தேதி முதல் அவர்களுக்கான ப்ரீ- வெட்டிங் கொண்டாட்டங்கள் கலைகட்ட துவங்கிவிட்டது.
இதில் ஆனந்த் அம்பானியின் உடல் எடை குறித்த சில விமர்சனங்கள் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. 2016 ம் ஆண்டிற்கு முன்னர் வரை அதிக எடையோடு இருந்த அவர் 18 மாதங்கள் சிரமப்பட்டு தனது 108 கிலோ எடையை குறைத்தார். 2016 ல் பார்க்கும் போது மிகவும் ஒல்லியான தோற்றத்தில் இருந்தார் ஆனந்த் அம்பானி. இதற்காக இவர் ஒரு நாளைக்கு 1200 -1400 கலோரிகள் வரை உணவு எடுத்து கொண்டுள்ளார். சக்கரை உணவுகள், பால் சார்ந்த பொருட்களை தவிர்த்தார். 5 மணிநேர உடற்பயிற்சி என கடும் போராட்டத்திற்கு பின்னர் தனது உடல் எடையை குறைத்துள்ளார்.
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேசப்பட்டியல் வெளியீடு ! கரூர் தொகுதியில் திமுக களமிறங்க வாய்ப்பு – முழுவிவரம் இதோ !
அப்படி கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்த ஆனந்த் அம்பானி தற்போது மீண்டும் அதே பழைய உடல் நிலைக்கு செல்ல காரணம் என்ன? என்பதை அவரது தாய் நீட்டா அம்பானி கூறியுள்ளார். ஆனந்த் அம்பானி அவர்களுக்கு ஆஸ்துமா பிரச்சனை உள்ளது. அதற்காக அவர் எடுத்து கொள்ளும் மருந்து அவருக்கு இருமடங்கு உடல் எடையை அதிகரிக்க செய்வதாகவும், அதிகப்படியான பசியை தூண்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோடி கோடியாக பணம் இருந்தாலும் ஆஸ்துமா பிரச்சனையோடு போராடி வருகிறார் ஆனந்த் அம்பானி. அவரின் இந்த நிலை அறியாமல் நெட்டிசன்கள் அவரின் உடல் எடையை விமர்சித்து வருகின்றனர்.