3 பேர் பலி
தற்போதைய காலகட்டத்தில் பேருந்தில் பயணம் செய்யும் இளைஞர்கள் படியில் தொங்கியபடியே செல்கின்றனர். அதன் விளைவு ரொம்ப மோசமாக இருக்கும் என்று தெரிந்து சாகசம், ஹீரோயிசம் என நினைத்து படியில் பயணம் செய்கிறார்கள். “படியில் பயணம் செய்தால் நொடியில் மரணம்” என்று அரசு பல விழிப்புணர்வை ஏற்படுத்திய போதிலும் தொடர்ந்து இளைஞர்கள் அதை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். குறிப்பாக கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் தான் இதை செய்கிறார்கள் என்று ஆங்காங்கே புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் படியில் பயணம் செய்த மூன்று கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருநாவலூரில் இருந்து புறப்பட தனியார் பேருந்தின் படிக்கட்டுகளில் கல்லூரி மாணவர்கள் தொங்கி கொண்டே வந்தாக கூறப்படுகிறது. பேருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, பேருந்து பின்னாடி வந்த கண்டெய்னர் லாரி முன்னேறி செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக மூன்று மாணவர்கள் மீது உரசியதில் அவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த தனுஷ், மோனிஷ், காமேஷ் ஆகிய 3 பேர் உடலையும் காவல்துறை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது போன்று மாணவர் ஆபத்தை உணர்ந்து படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று மக்கள் கூறிவருகின்றனர்.