IPL ரசிகர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.., போட்டிகள் இங்கே நடைபெறாது?.., வேறு இடத்திற்கு மாற்ற திட்டம்?IPL ரசிகர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.., போட்டிகள் இங்கே நடைபெறாது?.., வேறு இடத்திற்கு மாற்ற திட்டம்?

IPL ரசிகர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்

இந்த வருடத்திற்கான IPL போட்டிக்கான கால அட்டவணையை சமீபத்தில் வெளியீட்டு இருந்தது. அதன்படி IPL-ன் 17 வது சீசன் வருகிற 22ம் தேதி முதல் ஆரம்பமாக இருக்கிறது. இதன் முதல் போட்டியில் பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும்,  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் நடக்க இருக்கிறது. இதையடுத்து பஞ்சாப், கொல்கத்தா மற்றும் லக்னோ ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளும்  சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் IPL ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக போட்டிகள் நடைபெறும் இடத்தை மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த சில நாட்களாக பெங்களூரில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. இதனால் மக்கள் அங்கு பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் அங்கு போட்டிகள் நடைபெற்றால் சிரமம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கவிருக்கும் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தண்ணீர் பிரச்னையால் போட்டிகள் தடைபடாது என்றும் கூறப்படுகிறது. 

CAA எதிரொலி.., இந்த தேதியில் முழு அடைப்பு போராட்டம்.., களத்தில் குதிக்கும் மக்கள்.., எங்கே தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *