வரிச்சலுகை
சமீபத்தில் நடந்த சட்ட சபையில் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில் கணவனால் கழட்டிவிடப்பட்ட கைம்பெண்கள், போரில் ஊனமுற்ற ராணுவ வீரர்கள் உள்ளிட்டவர்களுக்கு மட்டும் சொத்து வரி மற்றும் வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரியும் சலுகையானது. அதுமட்டுமின்றி இனி வரும் நாட்களில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் இந்த வரிச் சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது இது குறித்து சூப்பர் நியூஸ் வெளியாகியுள்ளது. அதாவது, இன்று முதல் அந்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வரிச்சலுகை அறிவித்து தமிழக அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ” இந்த நடப்பாண்டு முதல் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வரிச்சலுகை வழங்கபடப்படும். ஆனால் அதற்கு 5 நிபந்தனைகள் இருக்கிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
- முன்னாள் ராணுவ வீரர்கள் நிரந்தரமாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
- முன்னாள் ராணுவ வீரர்கள் குடும்பத்துடன் வசிக்கும் கட்டடத்துக்கு மட்டும் இந்த சலுகை வழங்கப்படும்.
- ராணுவ வீரர்கள், பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு மறு வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் மத்திய அல்லது மாநில அரசின் பணியில் வேலை செய்பவராக இருக்க கூடாது.
- மறு வேலை வாய்ப்பில் ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இச்சலுகை பொருந்தாது.
- வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.., அகவிலைப்படி 4% உயர்வு?.., முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!!
மேலும் இந்த திட்டத்தின் மூலம், 1.20 லட்சத்துக்கும் மேலான முன்னாள் ராணுவ வீரர்கள் பயன்பெறுவார்கள்’ என்று தெரிவித்துள்ளது.