சச்சினின் சாதனையை முறியடித்த 19 வயது வீரர்
கடந்த சில நாட்களாக ரஞ்சி கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டியில் மும்பை – விதர்பா அணிகள் எதிர்கொள்கின்றனர். மேலும் இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி கிட்டத்தட்ட 224 ரன்களை குவித்தது. செகண்ட் பேட்டிங் இறங்கிய விதர்பா அணி வெறும் 105 ரன்களுக்கு சுருண்டது. இதனை தொடர்ந்து 119 ரன்களுடன் செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கிய மும்பை அணி 418 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. 538 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய விதர்பா அணிகள் என்று இரண்டு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்திருந்தது. இதனை தொடர்ந்து இன்று 4ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதில் வெற்றி கனியை யார் சுவைக்கிறார்கள் என்று பார்க்கலாம். இந்நிலையில் இந்த போட்டியில் வெறும் 19 வயதான மும்பை அணி வீரர் முஷீர் கான் சதம் விளாசினார்.இப்படி சிறு வயதில் சதம் அடித்து சாதனை புரிந்த இவர், கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அதாவது சச்சின் டெண்டுல்கர் கடந்த 1994-95-ம் ஆண்டு நடந்த ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் தனது 21 வயதில் சதம் அடித்ததே (140, 139 ரன்கள்) சாதனையாக இருந்தது. தற்போது இந்த சாதனையை முறியடித்த முஷீர் கான் இந்திய வீரர் சர்பராஸ் கானின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.