திருப்பதி பக்தர்களே.., கோவிலுக்கு செல்ல இதான் கரெக்ட் டைம்.., எந்த தேதியில் இருந்து முன்பதிவு?., தேவஸ்தானம் அறிவிப்பு!!!திருப்பதி பக்தர்களே.., கோவிலுக்கு செல்ல இதான் கரெக்ட் டைம்.., எந்த தேதியில் இருந்து முன்பதிவு?., தேவஸ்தானம் அறிவிப்பு!!!

திருப்பதி தேவஸ்தானம்

உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக இருக்கும் திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் தினசரி 70,000 பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். பணக்கார சாமியாக இருக்கும் ஏழுமலையானை தரிசிக்க அனுதினமும் மக்கள் கூட்டம் அலைமோதி வருவதால் இதனை கருத்தில் கொண்டு பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க திருப்பதி தேவஸ்தானம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்று தான் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் வசதியை தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் ஜூன் மாதத்திற்கான முன்பதிவு டிக்கெட் விநியோகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

  • தரிசன டிக்கெட்டுகளை பெற https://ttdevasthanams.ap.gov.in என்ற வளையதளத்திற்கு சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.
  • மேலும் இந்த லக்கி டிப் முன்பதிவு வருகிற மார்ச் 18 முதல் 20 ஆம் தேதி வரை திறந்திருக்கும்.
  • அதுமட்டுமின்றி  திருமலை ஆர்ஜித சேவை, கல்யாணோத்சவம், சஹஸ்ரதிபாலங்கர சேவை, ஆர்ஜித பிரம்மோத்ஸவம் மற்றும் ஊஞ்சல் சேவை ஆகிய முன்பதிவு டிக்கெட்டுகள், வருகிற மார்ச் 21 ஆம் தேதி காலை 10 மணி விநியோகம் செய்யப்பட இருக்கிறது.
  • ஜூன் மாத விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் மார்ச் 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
  • மேலும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வருகிற மார்ச் 25ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். அன்று மாலை 3 மணியளவில் திருமலை மற்றும் திருப்பதியில் விடுதிக்கான முன்பதிவு டிக்கெட் வெளியிடப்படவுள்ளது.

புதுச்சேரி சிறுமியை தொடர்ந்து சிறுவன் கொலை.., சத்தம் போட்டதால் இளைஞர் செய்த வெறிச் செயல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *