நாடாளுமன்ற தேர்தல் எப்போது?., தேதி இன்று அறிவிக்கப்படுமா?.., எதிர்பார்ப்பில் மக்கள்!!நாடாளுமன்ற தேர்தல் எப்போது?., தேதி இன்று அறிவிக்கப்படுமா?.., எதிர்பார்ப்பில் மக்கள்!!

நாடாளுமன்ற தேர்தல்

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், பல அரசியல் கட்சிகள் இப்பொழுது இருந்து மாநாடு, ஆலோசனை கூட்டம் என களம் காண தொடங்கி விட்டனர். அதுமட்டுமின்றி யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற விவாதம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. மேலும் தேர்தல் ஆணையம் தேர்தல் குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சமயத்தில் இரண்டு புதிய தேர்தல் ஆணையர்கள் பதவியேற்ற நிலையில், தற்போது தேர்தல் தேதி குறித்து ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதாவது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி இன்று அல்லது நாளை வெளியாகும் என கூறப்படுகிறது. அதற்கான அட்டவணை விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. மேலும் நாடு முழுவதும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை அரசு செய்து வருகிறது. அதுமட்டுமின்றி தேர்தலுக்கு தேவையானவைகளை தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது. அதன்படி, மின்னணு வாக்கு இயந்திரங்கள் தற்போது தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தேர்தல் தேதியை குறிக்க இன்று தேர்தல் ஆணையர்கள் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது. 

தேர்தல் பத்திர விவகாரம்.., பாஜக நன்கொடையாக வாங்கியது இத்தனை ஆயிரம் கோடிகளா?., டாப் 4ல எந்த கட்சி இருக்கிறது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *