விஜய் ஆண்டனி
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருபவர் தான் விஜய் ஆண்டனி. தற்போது தன்னுடைய கவனத்தை நடிப்பு பக்கம் திருப்பிய நிலையில், தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். பிச்சைக்காரன் என்ற படத்தின் மூலம் தனது முழு நடிப்பை வெளிக்காட்டிய விஜய் ஆண்டனிக்கு அதன் பிறகு தான் வாய்ப்புகள் தேடி வந்தது என்றே சொல்லலாம். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பிச்சைக்காரன் 2 என்ற படத்தை அவரே இயக்கி அவரே நடித்திருந்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் விபத்துகள், குழந்தை இறப்பு என தொடர்ந்து சோகத்தில் இருந்தாலும் கூட, தன்னுடைய கெரியரில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
தற்போது ரோமியோ படத்தில் நடித்து வரும் இவர், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. அதாவது அந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கும் மிருணாளினி ரவி ஃபர்ஸ்ட் நைட்டில் கையில் சரக்கு பாட்டிலுடன் இருப்பது போல் இடம் பெற்றிருந்தது. இது குறித்து சமீபத்தில் பட ப்ரோமோஷனில் கேள்வி கேட்கப்பட்ட போது விஜய் ஆண்டனி, ” குடி எல்லோருக்கும் ஒன்றுதான். ஆண் குடித்தால் தவறு இல்லை என்றால், பெண் குடித்தாலும் தவறு இல்லை. குடி என்பது ராஜா காலத்தில் இருந்து வருகிறது. அப்போது சோம பானம் என்று கூறுவார்கள். ஏன் ஜீசஸ் கூட மது குடித்துள்ளார். குடி என்பது நீண்ட நாட்களாகவே உள்ளது என்று கூறியுள்ளார். ஜீசஸ் குறித்து அவர் பேசியது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.