Home » சினிமா » சினிமாவில் என்ட்ரி கொடுத்த அண்ணாமலை.., எந்த படத்தில் தெரியுமா?.., ட்ரெய்லரே சும்மா அதிருதுல!!

சினிமாவில் என்ட்ரி கொடுத்த அண்ணாமலை.., எந்த படத்தில் தெரியுமா?.., ட்ரெய்லரே சும்மா அதிருதுல!!

சினிமாவில் என்ட்ரி கொடுத்த அண்ணாமலை.., எந்த படத்தில் தெரியுமா?.., ட்ரெய்லரே சும்மா அதிருதுல!!

சினிமாவில் என்ட்ரி கொடுத்த அண்ணாமலை

மக்களவை தேர்தல் நடக்கும் தேதி குறித்து நாளை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்த நிலையில், அரசியல் களம் தற்போது தான் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக பணியாற்றி வரும் கே. அண்ணாமலை சினிமாவில் களமிறங்கியுள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆனால் அது உண்மை தான். அண்ணாமலை அரசியலைத் தாண்டி தற்போது சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். அதாவது கன்னடத்தில் ஆர். ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகி வரும்  திரைப்படம் தான் “அரபி”. இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

அதை பார்த்த பிறகு தான் அண்ணாமலை படத்தில் நடித்துள்ளார் என்று பலருக்கும் தெரிகிறது. மேலும்  கன்னடம் படமென்றாலும் அண்ணாமலை பேசுவது எல்லோருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் பேச வைத்துள்ளனர். குறிப்பாக இந்த டிரைலர் வீடியோவில் அண்ணாமலை மட்டும் தான் பேசியிருக்கிறார். இரண்டு கைகளை இழந்த நீச்சல் வீரனின் பயிற்சியாளராக நடித்த அண்ணாமலை ஆக்சன் காட்சிகளிலும் பின்னி பெடலெடுத்து உள்ளார். இதை பார்த்த பாஜகவினர் இந்த படத்தை தமிழில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் பலரும் அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். படத்தில் கமிட்டான இவர் ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் அண்ணாமலை நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“அழகிய தமிழ்மகன்” படத்தில் நடித்த இந்த சிறுமியை தெரிகிறதா?.., இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top