"லொள்ளு சபா" சேசுவுக்கு திடீர் மாரடைப்பு.., மருத்துவமனையில் அனுமதி.., சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!! "லொள்ளு சபா" சேசுவுக்கு திடீர் மாரடைப்பு.., மருத்துவமனையில் அனுமதி.., சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

“லொள்ளு சபா” சேசு

விஜய் டிவியில் சில ஆண்டுகளுக்கு முன்பு பேமஸ் ஷோவாக இருந்து வந்த “லொள்ளு சபா” நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் சேசு. தற்போது வெள்ளித்திரையில் கலக்கி  கொண்டிருக்கும் இவர் தனது தனித்துவமான நடிப்பால், மக்களை கட்டி போட்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக அவர் அதிகமாக சந்தானம் படத்தில் தான் நடித்துள்ளார். அந்த வகையில் கடைசியாக வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில்  “லொள்ளு சபா” சேசுவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் அவர் விரைவில் மீண்டு வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அண்டாக்க கசம் என்ற நிகழ்ச்சியில் “லொள்ளு சபா” டீம் கலந்து கொண்ட நிலையில், அதில் கலந்து கொண்ட சேசுவுக்கு இப்படியானதை தொடர்ந்து ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

கல்யாணத்திற்கு பிறகு குட் நியூஸ் சொன்ன பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.., ரசிகர்கள் வாழ்த்து!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *