திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழா 2024. பங்குனி திருவிழாவிற்காக 3 அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 15 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த விழாவிற்கான விசேஷ நாட்கள் எப்போது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழா 2024
இந்த கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடந்து கொண்டு தான் உள்ளது. அதிலும் பங்குனி மாதம் நடைபெறக்கூடிய இந்த பங்குனி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். தொடர்ந்து 15 நாட்கள் வெகு விமர்சியாக இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான பங்குனி திருவிழா இன்று முதல் தொடங்கி மார்ச் 30 வரை நடைபெறும்.
பங்குனி திருவிழா விசேஷ நாட்கள்:
கொடியேற்றம் – மார்ச் 15
பங்குனி உத்திரம் – மார்ச் 24
சூரசம்கார லீலை – மார்ச் 26
முருகன் பட்டாபிஷேகம் – மார்ச் 27
முருகன் தெய்வானை திருக்கல்யாணம்- மார்ச் 28
மகா தேரோட்டம் – மார்ச் 29
தீர்த்த உற்சவம் – மார்ச் 30
பெண்களின் சபரிமலை பற்றி தெரியுமா ? கொடியேற்றத்துடன் தொடங்கிய மாசி கொடை விழா ! ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு
அழைப்பிதழ்கள் :
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா, திருக்கார்த்திகை தீபதிருவிழா, தை தெப்பத்திருவிழா ஆகிய விசேஷங்களுக்கு ஒரே அழைப்பிதழ்கள் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பங்குனி பெருவிழாவிற்கு மட்டும் 3 அழைப்பிதழ்கள் தயார்படுத்தி பக்தர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.
பங்குனி உத்திரம்:
இந்த பங்குனி திருவிழாவில் பங்குனி உத்திரம் நிகழ்வானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். சூரனை வதம் செய்த முருகனை தெய்வானை கரம் பிடித்தது இன்று தான். சிவன் பார்வதி தேவியையும், ஸ்ரீராமர் சீதையையும் மணம் முடித்தது இன்று தான். இது போன்று பல தெய்வீக திருமணங்கள் இன்று தான் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அத்தகைய சிறப்பு வாய்ந்த நாளில் நாமும் முருகப்பெருமானை நேரில் சென்று தரிசித்து அனைத்து செல்வ வளங்களையும் பெற வேண்டும்.