2024 மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு2024 மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு

2024 மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது உள்ள பாஜகவின் ஆட்சிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் நாடாளுமன்ற தேர்தலை விரைந்து நடத்த இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் பணிகள் தொடர்பான நடவடிக்கைகள், அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து தேர்தல் ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன் அடிப்படையில் தற்போது நாடு முழுவதும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. மேலும் தேர்தல் பணிக்காக 2100 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் உட்பட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது. இதில் தமிழ்நாட்டிற்கு முதல் கட்டத்திலேயே தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டிற்கு வரும் ஏப்ரல் 19 ஆம் தேதியன்று தேர்தல் நடைபெரும் என்று தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் ஜூன் 04 தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

96.88 கோடி பேர் வரும் மக்களவை தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இதில் 2.18 லட்சம் பேர் 100 வயதை கடந்தவர்கள் மற்றும் 20 கோடி பேர் இளம் வாக்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 1.8 கோடி முதல் தலைமுறை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இரவு நேரங்ககளில் வண்டி, வாகனங்களில் பணம் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் வங்கி கணக்கில் நடைபெறும் பரிவர்த்தனைகள் கண்கணிக்கப்படும்.

தேசிய, மாநில, மாவட்ட சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும்.

பாரபட்சமாக செயல்படும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவர்.

இந்தியா முழுவதும் 1.50 கோடி பணியாளர்கள் தேர்தலில் பணியாற்ற உள்ளனர்.

தன்னார்வலர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது.

80 வயதை தாண்டியவர்கள் வாக்களிக்க ஏதுவாக தபால் மூலம் வாக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் குடிநீர், கழிப்பறை மற்றும் சக்கர நாற்காலி அமைத்தல் போன்ற அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்படும்.

50 % வாக்குச்சாவடிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

ட்ரோன்கள் மூலம் எல்லைகள் தீவிரமாக கண்கணிக்கப்படும்.

பணபலம், ஆள்பலத்தை பயன்படுத்தி வன்முறை செய்பவர்களை கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மதுபானம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள்,பணம் உள்ளிட்டவற்றை தேர்தல் நேரத்தில் விநியோகிக்க கூடாது.

மேலும் வன்முறையின்றி தேர்தல் நடத்துவது உறுதி செய்யப்படும்.

சாதி, மத அடிப்படையில் வாக்கு சேகரிக்க தடை விதிக்கப்பட்டுளளது.

அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களில் 3500 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுளளது.

தேர்தல் ஆணையர் உட்பட யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால் தேவையற்ற வதந்திகளை பரப்பக்கூடாது.

என்று தேர்தல் ஆணையர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *