Home » செய்திகள் » ரீல்ஸ் மோகத்தால் வந்த வினை.., தீ வைத்து டைவ் அடித்து சாகசம் செய்த இளைஞர் – இருவரை கைது செய்த போலீஸ்!!

ரீல்ஸ் மோகத்தால் வந்த வினை.., தீ வைத்து டைவ் அடித்து சாகசம் செய்த இளைஞர் – இருவரை கைது செய்த போலீஸ்!!

ரீல்ஸ் மோகத்தால் வந்த வினை.., தீ வைத்து டைவ் அடித்து சாகசம் செய்த இளைஞர் - இருவரை கைது செய்த போலீஸ்!!

ரீல்ஸ் மோகத்தால் வந்த வினை

தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் கேவலம் ஒரு லைக்ஸ் வாங்குவதற்காக உயிரை பணயம் வைத்து ரீல்ஸ் எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தை சேர்ந்த இளைஞன் பாலா ரஞ்சித் என்பவர் பல சாகசங்களை செய்து வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அவர் செய்யும் சாகசங்களுக்கு பலரும் ஆதரவு கொடுத்தாலும் பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி சில நாட்களுக்கு முன்னர் வைரவன் தருவை குளத்தில் தனது நண்பர்களுடன் சென்று அங்கு தண்ணீரில் பெட்ரோல் ஊற்றி அதில் குதித்து வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு 2 மில்லியன் லைக்ஸ் கிடைத்த நிலையில், பலரும் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கமெண்ட் செய்து வந்தனர்.

இந்நிலையில் ரஞ்சித் பாலா மற்றும் அவரது நண்பர்களான சிவக்குமார், இசக்கி ராஜா ஆகியோர் மீது தட்டார்மடம் போலீசார், 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து  ரஞ்சித் பாலா மற்றும் சிவக்குமார் என இரண்டு இளைஞர்களை காவல்துறை கைது செய்த நிலையில், மற்ற மூன்று பேரை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது. இந்த சம்பவம் சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

விஜய் டிவியில் இருந்து வேறொரு டிவிக்கு தாவிய நீயா நானா கோபிநாத்?.., என்னவா இருக்கும்?.., ரசிகர்கள் ஷாக்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top