ரயில் தடம் புரண்டு விபத்து
சமீப காலமாக ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ரயில் நிலையம் அருகே ஒரு ரயில் தடம் புரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, பர்மதி – ஆக்ரா என்ற விரைவு ரயில், குஜராத்தில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவை நோக்கி நேற்று மாலை புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. நள்ளிரவில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ரயில் நிலையம் அருகே அந்த ரயில் சென்று கொண்டிருந்த போது திடீரென ரயில் எஞ்சினுடன் நான்கு பெட்டிகள் தடம் புரண்டது. இதனால் அந்த ரயில் பயணித்த பயணிகளுக்கு படு காயங்கள் ஏற்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் இது குறித்து ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை காயமடைந்த பயணிகளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து எப்படி நடந்தது என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த விபத்தால் ஆறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், இரண்டு ரயில்கள் மாற்றுப்பாதையிலும் இயக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த பயணிகளின் விவரங்களை தெரிந்து கொள்ள 0145-2429642 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.