டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
பொதுவாக தமிழகத்தில் ஏதேனும் விசேஷ நாட்களிலோ அல்லது முக்கிய பண்டிகை நாட்களிலோ பொதுமக்கள் நலன் கருதி அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி அந்த நல்ல நாட்களில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மதுபான கடைகளுக்கு அரசு விடுப்பு தருவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் ஒரு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். அதாவது திருவாரூரில் உலகப்புகழ்பெற்ற தியாகராஜர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திர விழாவின் ஆழித்தேரோட்டம் நடைபெற்று வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அந்த வகையில் இந்த வருடம் வருகிற மார்ச் 21ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. மேலும் இந்த ஆழித்தேரோட்டம் 300 டன் எடை என்பதால் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூரில் இருந்து ஏகப்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுப்பார்கள். எனவே இதனை கருத்தில் கொண்டு இந்த விழாவில் பெரும்பாலான மக்கள் கலந்து கொள்ள இருப்பதால் 21ம் தேதி மட்டும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.