விஜய் ஆண்டனி பட நடிகை
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இப்பொழுது அவர் ரோமியோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விஜய் ஆண்டனி பல வித்தியாசமான படங்களை கொடுத்துள்ளார். அதில் ஒன்று தான் சைத்தான் திரைப்படம். இப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தவர் தான் நடிகை அருந்ததி நாயர். கடந்த 2014ம் ஆண்டு வெளியான பொங்கி எழு மனோகரா என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்த இவர் கடைசியாக ஆயிரம் பொற்காசுகள் என்ற படத்தில் நடித்திருந்தார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் இவர் குறித்து ஒரு ஷாக்கிங் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகை அருந்ததி நாயர் கோவளம் அருகே பைக் விபத்தில் சிக்கி, தற்போது அவருக்கு தனியார் மருத்துவமனையில் வென்டிலேட்டர் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் அதற்கு அதிக பணம் செலவாகும் என்பதால் உங்களால் முடிந்த அளவுக்கு பண உதவி செய்யுமாறு அவருடைய நெருங்கிய தோழி பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சற்று சோகத்தில் இருந்து வருகின்றனர். மேலும் அவர் விரைவில் குணம் அடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.