பப்லு ஷீத்தல்
அஜித் நடித்த அவள் வருவாளா என்ற படத்தின் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் நடிகர் பப்லு பிரித்விராஜ். இவர் கடைசியாக அனிமல் என்ற படத்தில் வில்லனாக நடித்து மாஸ் காட்டி இருந்தார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வரும் இவர் தனது மனைவியை விவாகரத்து செய்து ஷீத்தல் என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். அப்போது இந்த காதல் பெரும் சர்ச்சையாக கிளம்பிய நிலையில், எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சோசியல் மீடியாவில் பேட்டி கொடுத்து வந்தனர். மேலும் பல விதமாக ரீல்ஸ் செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
எனவே அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என ரசிகர்கள் நினைத்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் ஷீத்தல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து பப்லுடன் எடுத்துக்கொண்ட போட்டோ வீடியோவை Delete செய்தார். அதை பார்த்த ரசிகர்கள் நீங்க பிரிந்து விடீர்களா என்று கேட்டு வந்தனர். இதுகுறித்து வாயை திறக்காமல் இருந்த ஷீத்தல் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு ஷாக்கிங் பதிவை வெளியிட்டுள்ளார்.
ஆளுநர் பதவியை திடீரென ராஜினாமா செய்த தமிழிசை.., காரணம் என்ன?.., மக்களவைத் தேர்தலில் போட்டியா?
அதில்,” என்னுடைய கடந்த கால வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறீர்கள், நானும் பப்லுவும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். நாங்கள் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் தான் இருந்தோம். ஆனால் எங்களுடைய உறவு நாங்கள் நினைத்த மாதிரி அமையவில்லை. எனவே நாங்கள் தற்போது பிரிந்து விட்டோம். அதை கடந்து செல்ல வேண்டிய நேரம் இது. எனவே எனது முடிவை நீங்கள் மதிப்பீர்கள் என்று நினைக்கிறேன் என்று ஷீத்தல் பதிவிட்டுள்ளார்.