2024 மக்களவை தேர்தல்.., 21 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க கட்சியினர்.., முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு2024 மக்களவை தேர்தல்.., 21 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க கட்சியினர்.., முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

2024 மக்களவை தேர்தல்

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி நேற்று முன்தினம்(மார்ச் 16) வெளியான நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் ஏழு கட்டங்கள் வாரியாக தேர்தல்  வருகிற ஏப்ரல் 19ம் தேதி  நடைபெற இருக்கும் நிலையில், வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 6 ம் தேதி நடைபெறும் என அறிக்கை வெளியாகியுள்ளது. இதனால் தற்போது தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போவது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது திமுக கட்சி வடசென்னை, தென் சென்னை, கோவை, ஈரோடு, தூத்துக்குடி, தென்காசி, தேனி, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர்,  வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, ஆரணி, நீலகிரி, பொள்ளாச்சி, தஞ்சாவூர், காஞ்சிபுரம்,  சேலம், கள்ளக்குறிச்சி, அரக்கோணம், பெரம்பலூர்  உள்ளிட்ட  21 தொகுதிகளில் போட்டியிட இருக்கிறது. மேலும் திமுகவுடன் கூட்டணி வைத்த மதிமுக கட்சிக்கு திருச்சி தொகுதியை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திமுக கூட்டணியில் மதிமுக – 1 தொகுதி, விசிக – 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் – 2 தொகுதி, ஐ.யூ.எம்.எல் – 1 தொகுதி, கொ.ம.தே.க – 1 தொகுதி, மார்க்சிஸ்ட் – 2 தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மக்களே குளுகுளு செய்தி.., தமிழகத்தில் இந்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *