லக்பதி திதி திட்டம்
மக்களவை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நிலையில் மத்திய அரசு தொடர்ந்து பெண்களுக்காக பல நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்களின் தொழில் முனைவோராக மாற்றுவதற்காக கொண்டு வந்த திட்டம் தான் லக்பதி திதி (Lakhpati Didi). இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது 83 லட்சம் சுய உதவி சங்கங்கள் இருக்கும் நிலையில், 9 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் அங்கம் வகித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த சங்கங்கள் மூலமாக பொருட்களை தயாரிப்பதற்கான தொழில்நுட்ப அறிவு மற்றும் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இந்த திட்டத்தின் கீழ் எப்படி விண்ணப்பிப்பது? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

எப்படி விண்ணப்பிப்பது?
- இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க 18 முதல் 50 வயதுக்குட்பட்ட கிராமப்புற பெண்களாக இருக்க வேண்டும்
- மேலும் இந்த திட்டத்தில் சேர விண்ணப்பதாரர்களின் ஆண்டு வருமானம் 3 லட்சம் குறைவாக இருக்க வேண்டும்.
- லக்பதி யோஜனா என்ற சமூக வலைத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
- இந்த திட்டத்தில் இணைய தார் கார்டு, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், சுய உதவி குழு உறுப்பினர் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் அவசியம்
2024 மக்களவை தேர்தல்.., 21 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க கட்சியினர்.., முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சுயதொழில் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை துறைசார் விற்பனை நிலையங்கள் மற்றும் கண்காட்சிகளில் விற்பனை செய்வதன் மூலம் வருமானம் உயர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.