இபிஎஸ்க்கு அடித்த ஜாக்பாட் ! ஓபிஎஸ் அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது – நிரந்தர தடைவிதித்த சென்னை ஐகோர்ட் !

இபிஎஸ்க்கு அடித்த ஜாக்பாட் ! நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அதிமுக கட்சியின் சின்னம், கொடி போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி மனுதாக்கல் செய்திருந்தார். மேலும் இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதிமுகவின் கொடி, சின்னம் முதலியவற்றை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பயன்படுத்துவதை தடை விதிக்க கூறி அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இரு தரப்பினருடைய வாதங்களை கேட்ட பின்னர் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து.

இந்நிலையில் நீதிபதி சதீஷ்குமார் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி அதிமுக பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு விதித்த இடைக்கால தடையை நிரந்தர தடையாக விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மகளிருக்கு ரூ.5 லட்சம்.., சூப்பர் திட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசு.., விண்ணப்பிப்பது எப்படி?

மேலும் மக்களவை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என சில நாட்களுக்கு முன்னர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் உயர்நீதிமன்றம் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை விதித்து தீர்ப்பு வழங்கியதால் அரசியல் களத்தில் ஒபிஎஸ் க்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. மேலும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்யபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment