விஜய்க்கு வந்த ஆபத்து
சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக கேரளாவுக்கு படக்குழு சென்றுள்ளது. பொதுவாக தமிழ் நாட்டுக்கு பிறகு விஜய்யோட கோட்டையாக கேரள இருந்து வருகிறது. அங்கு அவருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் காவலன் படத்திற்கு பிறகு அவர் கேரளாவுக்கு சென்று உள்ளதால் அங்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

குறிப்பாக ஏர்போர்ட்டில் ஆரம்பித்து அவர் தங்கப்போகும் ஹோட்டல் வரைக்கும் அவருடைய ரசிகர்கள் கூட்டத்தால் கேரளாவே ஸ்தம்பித்து போனது. அப்போது ஆர்ப்பரித்த ரசிகர்களால் விஜய்யின் கார் கண்ணாடி சுக்குநூறாக உடைந்து போனது. அதுவும் தளபதியே மயிரிழையில் உயிர் தப்பும் அளவிற்கு கூட்ட நெரிசலில் சிக்கி இருக்கிறார். அதன் பிறகு விஜய்யின் கார் எந்த அளவுக்கு சேதமாகி உள்ளது என்ற வீடியோ ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. இதை வைத்து பார்க்கும் பொழுது தற்போது அரசியலில் இறங்கியுள்ள விஜய் கேரளாவில் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.