உலகநாயகன் கமல்ஹாசன்
தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை ஹீரோவாக நடித்து வருபவர் தான் கமல்ஹாசன். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடித்தும், கதாபாத்திரத்திற்கு ஏற்ப உடல் அமைப்பை மாற்றம் செய்வதால் தான் இவரை ரசிகர்கள் உலக நாயகன் என்று அன்போடு அழைக்கப்படுகிறார். தற்போது இவர் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
தற்போது மக்களவைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், தனது முழு கவனத்தையும் அரசியல் பக்கம் திரும்பியுள்ளார். மேலும் இந்த தேர்தலில் போட்டி போட போவதில்லை என்றும், திமுக கட்சிக்கு ஆதரவு தர போவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் உலக நாயகனின் முதல் பேரன் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது கமல்ஹாசனின் அண்ணன் மகளான சுகாசினி பிரபல இயக்குனர் மணி ரத்னத்தை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு நந்தன் மணிரத்னம் என்ற மகன் இருக்கிறார். தற்போது அவர் தாயுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் கமலின் மூத்த பேரனா இது என்று வாயடைத்து போய் உள்ளனர். மேலும் 30 வருடங்களுக்கு பிறகு மருமகன் இயக்கும் தக் லைவ் என்ற படத்தில் கமல் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களால் விஜய்க்கு வந்த ஆபத்து.., மயிரிழையில் உயிர் தப்பிய தளபதி.., கேரளாவில் பரபரப்பு., என்ன நடந்தது?
