தாயின் கொடூர செயல்
கர்நாடகா மாநிலம் மல்லசமுத்ரா என்ற கிராமத்தைச் சேர்ந்த மரக்கா(24) என்பவருக்கு கல்யாணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் அந்த கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் 3 பேர் உடல் கருகி நிலையில் இறந்து கிடைத்துள்ளன. இதை பார்த்து ஷாக்கான மக்கள் உடனே போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த மூன்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இதனை தொடர்ந்து காவல்துறை விசாரணையை மேற்கொண்டதில், குடும்பத் தகராறு காரணமாக, தாய் தனது குழந்தைகளுக்கு பெட்ரோலை ஊற்றி தீ வைத்து, அதன் பின் அவரும் தீக்குளித்து இறந்து கொண்டது தெரியவந்தது. ஆனால் இந்த உயிரிழப்பு குடும்பச் சண்டையா அல்லது வேறு பிரச்சினையா என காவல்துறை தொடர்ந்து தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. சமீப காலமாக தொடர்ந்து கொலை கொள்ளை நடக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.