மக்களவை தேர்தல்
மக்களவை தேர்தல் நடக்க அடுத்த மாதம் நடக்க இருக்கும் நிலையில் தமிழகத்தில் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் சூடுபிடித்துள்ளது. தொடர்ந்து கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட வண்ணம் உள்ளன. ஆனால் இன்னும் பாஜக கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட வில்லை. மேலும் பாஜகவுடன் கூட்டணி வைத்த பாமகவிற்கு 10 இடம், அமமுகவிற்கு 2 இடம், புதிய நீதி கட்சிக்கு 1 இடம் என பாஜக ஒதுக்கப்பட்ட நிலையில் , இப்பொழுது வரை ஓபிஎஸ் அணிக்கு இடம் ஒதுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தங்களுக்கு மூன்று தொகுதிகள் வேண்டும் என்று பிரதமரிடம் மனு கொடுத்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
கடந்த தேர்தலில் ஓபிஎஸ் மகனுக்கு கொடுக்கப்பட்ட நிலையில் இம்முறையும் அவருடைய மகனுக்கு தான் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஓபிஎஸ் அணி அதிமுக பெயரையோ, சின்னத்தையோ பயன்படுத்த கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் ஓபிஎஸ் அணி பாஜக தாமரை சின்னத்தில் போட்டியிட போவதாக பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் பாஜக சார்பில் ஓபிஎஸ் அணிக்கு 1 இடம் மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. அதன்படி தாமரை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என பாஜக அவரை வற்புறுத்தி உள்ளதாம். இதனால் ஓபிஎஸ் இந்த கோரிக்கைகளை ஏற்பாரா? என கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கிறது.