2024 IPL போட்டி.., சேப்பாக்கம் செல்ல பேருந்துகளில் இலவச பயணம்.., ஆனா., ஒரு கண்டிஷன் இருக்கு?.., அரசு அறிவிப்பு!!2024 IPL போட்டி.., சேப்பாக்கம் செல்ல பேருந்துகளில் இலவச பயணம்.., ஆனா., ஒரு கண்டிஷன் இருக்கு?.., அரசு அறிவிப்பு!!

2024 IPL போட்டி

2024 IPL கிரிக்கெட் தொடரின் 17வது சீசன் நாளை முதல் தொடங்க இருக்கிறது. இந்த சீசனில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்களது அணியின் வீரர்களை தீவிரமாக தயார் செய்து பயங்கரமாக பயிற்சி எடுத்து வருகின்றனர். எனவே நாளை முதல் களைகட்ட இருக்கும் இந்த ஐபிஎல் 17வது சீசனில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளனர். மேலும் இந்த போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மேலும் இதற்கான டிக்கெட்கள் ஆன்லைனில் விற்கப்பட்டது.

விற்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் டிக்கெட்கள் காலியானதால் ரசிகர்கள் சற்று சோகத்தில் இருந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி சென்னை அணிக்காக தோனி கடைசியாக விளையாட இருப்பதால் அவர் ஓப்பனிங் பேட் செய்வார் என ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டியை காண சென்னை சேப்பாக்கம் வரும் ரசிகர்களுக்கு மாநகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லை என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

அதன்படி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளுக்கு செல்லும் ரசிகர்கள் மூன்று மணி நேரத்திற்கு முன்பாகவே சேப்பாக்கம் செல்லும் பேருந்துகளில் உங்களுடைய டிக்கெட்டை காண்பித்து செல்லலாம். அதே போல் வீடு திரும்பும் போது  3 மணி நேரத்துக்கு, சேப்பாக்கத்தில் இருந்து பிற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்கலாம். ஆனால் இந்த வசதி குளிர்சாதன பேருந்துகளில் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. 

2024 லோக்சபா தேர்தல் எதிரொலி.., இனி பேருந்துகளில் இதற்கு அனுமதி இல்லை.., தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *