மதுரை ஜெய்ஹிந்துபுரம் வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா 2024மதுரை ஜெய்ஹிந்துபுரம் வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா 2024

மதுரை ஜெய்ஹிந்துபுரம் வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா 2024. வழக்கமாக இத்திருவிழா பங்குனி மாதத்தில் நடத்தப்படும். ஆனால் இந்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் வருகிற காரணத்தால் திருவிழாவை வைகாசியில் நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 72 வது வைகாசி உற்சவ திருவிழாவிற்கான அழைப்பிதழ் இந்து சமய அறநிலையத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் முக்கிய நிகழ்வுகளுக்கான தேதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கொடியேற்றம் – 17.05.2024 (வைகாசி 4 ம் நாள்) இரவு 7 மணிக்குமேல்

காப்பு கட்டும் நாள் – 24.05.2024 ( வைகாசி 11 ம் நாள்) (நேர்த்திக்கடன் செலுத்துவோர்)

72 வது வைகாசி உற்சவ திருவிழா சிறப்பு நிகழ்ச்சிகள்

பால் குடம், மற்றும் காவடி – 31.05.2024 (வெள்ளிக்கிழமை) காலை 5 மணிக்கு

மாபெரும் அன்னதானம் – 31.05.2024 (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு

அம்மன் பூப்பல்லக்கு சுற்றி வருதல் – 31.05.2024 (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு

பங்குனி உத்திரம் 2024 ! முருக பெருமானின் பிறந்த நாள் என்று அழைக்கப்படும் இதன் வரலாறு மற்றும் சிறப்புக்கள் முழு விபரம் உள்ளே !

அக்னி சட்டி எடுத்து வருதல் – 01.06.2024 (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை

முளைப்பாரி எடுத்தல் – 01.06.2024 (சனிக்கிழமை) இரவு 8 மணி

ஊர்ப்பொங்கல் – 02.06.2024 , 03.06.2024 04.06.2024 ஆகிய மூன்று நாட்கள். காலை 11 மணிமுதல் இரவு 9.30 மணிவரை

திருவிளக்கு பூஜை – 03.06.2024(திங்கள் கிழமை) மாலை 5.30 மணி

மஞ்சள் நீராட்டு விழா – 04.06.2024 (செவ்வாய் கிழமை ) மாலை 5 மணி

கூழ் வழங்குதல் – 04.06.2024 (செவ்வாய் கிழமை ) இரவு 7 மணி.

Join Whatsapp Group Get Information

By Revathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *