நட்சத்திர தொகுதியாக மாறிய நீலகிரி ! வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்த அரசியல் கட்சிகள் - புதிய நபரை களமிறக்கிய அதிமுக !நட்சத்திர தொகுதியாக மாறிய நீலகிரி ! வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்த அரசியல் கட்சிகள் - புதிய நபரை களமிறக்கிய அதிமுக !

நட்சத்திர தொகுதியாக மாறிய நீலகிரி. இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில் முதல் கட்டத்திலேயே வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார். இதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக தங்களின் வேட்பாளர் பட்டியலை அண்மையில் அறிவித்தனர். மேலும் பாஜகவும் தங்கள் தலைமையில் கூட்டணி அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் திமுகவின் சார்பில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஆ .ராசா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.மேலும் தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுகவின்வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் தனபால் அவர்களின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன் முதல்முறையாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்.

தேர்தலில் போட்டியிடும் கிரேட் காளி ! சொந்த தொகுதியில் வேட்பாளராக அறிவித்த பாஜக – எதிரிகளை ஒரே அடியில் வீழ்த்தும் கிரேட் காளி தேர்தலில் வெற்றி பெறுவாரா ?

மேலும் பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நீலகிரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதன் மூலம் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடவும் தொகுதியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *