2024 லோக்சபா தேர்தல்
தமிழகத்தில் மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி கிட்டத்தட்ட 39 நாடாளுமன்ற தொகுதிகளில் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் தமிழக அரசு பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததிலிருந்து பறக்கும் படையினர் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி சோதனை செய்து வருகின்றனர். இது வரை பல லட்ச பணம் மற்றும் நகைகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து லோக்சபா தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு ஒரு அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் அரசு கூறியிருப்பதாவது, 2024 ம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 17ம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19ம் தேதி மாலை 6 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 2024 ஜூன் 4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மாலை 6 மணி வரை திறக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையை கேட்ட மதுபிரியர்கள் சற்று சோகத்தில் இருந்து வருகின்றனர்.