ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜினாமா
திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடியும் அவருடைய மனைவியுமான விசாலாட்சி மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில் இருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் அவருக்கு சட்டப்பேரவை உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தாங்கள் குற்றவாளி இல்லை என்று பொன்முடி மேல்முறையீடு செய்த நிலையில், அவருடைய தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதுடன், அமைச்சர் பதவி பிராமணம் செய்து வைக்க முதல்வர் ஆளுநர் ஆர்.என் ரவிக்கு கடிதம் எழுதினார். இது குறித்து பேசிய ஆளுநர் அவருக்கு தண்டனை மட்டும் தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அவர் குற்றவாளி இல்லை என்று இன்னும் தீர்ப்பு வெளியாகவில்லை. எனவே அவருக்கு பதவி பிராமணம் செய்து வைக்க மறுத்துள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு பதவி பிரமாணம் செய்ய உத்தரவு கொடுக்க கூறி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்தது. இதை விசாரித்த நீதிமன்றம், ஆளுநர் ரவி என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்றும் சரமாரியாக கேள்விகளை எழுப்பியது. அதுமட்டுமின்றி நாளை பதில் அளிக்குமாறு கெடு கொடுத்தார். இருப்பினும் ஆளுநர் பதவி பிரமாணம் செய்ய முன்வரவில்லை. மேலும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தகவல் வெளியாகி வருகிறது.