லோக்சபா தேர்தல் நாள்
லோக்சபா தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரி ஏப்ரல் 19ம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தேர்தல் நடைபெற இருக்கும் நாட்களில் ஊதியத்துடன் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் இது குறித்து அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி மற்ற மாநிலங்களுக்கு தனியார், அரசு நிறுவனங்களில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற ஏப்.26-ந் தேதி 2ம் கட்ட தேர்தலும், 3ம் கட்ட தேர்தல் மே 7ம் தேதியும், மே-13ம் தேதி 4ம் கட்ட தேர்தலும், மே 20-ம் தேதி 5ம் கட்ட தேர்தலும், மே-25-ம் தேதி 6ம் கட்ட தேர்தலும், ஜூன் 1-ஆம் தேதி 7ம் கட்ட தேர்தலும் நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.