ரயில்வே அறிவிப்பு
பொதுவாக மக்கள் தங்களது சௌகரிய பயணத்துக்காக முதலில் தேர்ந்தெடுப்பது ரயில் சேவையை தான். தினசரி பெரும்பாலான மக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுப்பதற்காக வரிசையில் கால் கடுக்க நிற்கும் சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில் மக்களின் சிரமத்தை போக்கும் விதமாக ரயில்வே நிர்வாகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ரயில் நிலையத்தில் பயணிகள் QR குறியீட்டை பயன்படுத்தி டிக்கெட் வாங்குவதற்கான கட்டண முறையை தெற்கு மத்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்த வசதி தற்போது செகந்திராபாத் கோட்டத்தின் கீழ் உள்ள 14 நிலையங்களில் அமைந்துள்ள 31 கவுண்டர்களில் இது செயல்படுத்தப்படுகிறது. விரைவில் எல்லா ரயில் நிலையத்தில் இந்த வசதி கொண்டுவரப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் QR குறியீட்டை பயன்படுத்தி டிக்கெட் பெற ஆன்லைன் பேமெண்ட் ஆப்களான போன்பே, கூகுள் பே, பிஎச்ஐஎம் மற்றும் பேடிஎம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பயணிகள் கால் கடுக்க நிற்கும் அவசியமில்லாத சூழல் உருவாகியுள்ளது. எனவே பயணிகள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.