மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் வரலாறு காணாத அளவுக்கு அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் வெளியே வரவே அச்சம் அடைந்து வருகின்றனர். எப்படா மழை பெய்து இந்த வெப்பத்தின் தாக்கத்தை தனிக்குமோ? என்று மக்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகம் உள்ளிட்ட சில முக்கிய பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 23 முதல் மார்ச் 28 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை வானிலை ஓரளவுக்கு மேக மூட்டத்துடன் காணப்படும். இதையடுத்து வானிலையில் எந்த மாற்றமும் இல்லாததால் கடலுக்குள் மீனவர்கள் செல்ல தடை இல்லை என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.