ஸ்டார் தொகுதியாக மாறிய விருதுநகர் .நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பாரதிய ஜனதா சார்பில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவுக்கு 5 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான வேட்பாளர் பட்டியலை தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ளார்.
ஸ்டார் தொகுதியாக மாறிய விருதுநகர்
JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS
ராதிகா சரத்குமார் பாஜக சார்பில் விருதுநகரில் போட்டி :
மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இந்த வகையில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் களமிறக்கப்பட்டுள்ளார். மேலும்
தென்காசி – ஜான் பாண்டியன்
சிவகங்கை – தேவநாதன்
நாகை – ரமேஷ்
தஞ்சை – முருகானந்தம் ஆகியோர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுவரை பாஜக சார்பில் போட்டியிடும் 23 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சீமானுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் இதுதானா?.., அவரின் ஆவேச பேச்சுக்கு சரியான சின்னம்?
தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் போட்டி :
தற்போது அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் போட்டியிட போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி
மத்திய சென்னை – பார்த்தசாரதி
திருவள்ளூர் – நல்லதம்பி
தஞ்சை – சிவநேசன்
கடலூர் – சிவகொழுந்து ஆகியோர் தேமுதிக சார்பில் முரசு சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.