ஆதார் அட்டைதாரர்களே., உடனே இந்த வசதி மூலம் லாக் பண்ணுங்க? வெளியான முக்கிய தகவல்!!!ஆதார் அட்டைதாரர்களே., உடனே இந்த வசதி மூலம் லாக் பண்ணுங்க? வெளியான முக்கிய தகவல்!!!

ஆதார் அட்டை

தற்போதைய காலகட்டத்தில் சிம் கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு ஓபன் செய்வது வரை ஆதார் அட்டை முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. இப்படி எல்லா விஷயங்களிலும் முக்கிய ஆவணமாக இருந்து வரும் ஆதார் கார்டை வைத்திருப்பவர்களின் பயோமெட்ரிக்ஸை பயன்படுத்தி, முறைகேடு நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது போன்ற முறைகேடு நடக்காமல் தவிர்க்க பயோமெட்ரிக்ஸை தற்காலிகமாகப் பூட்டி விட்டு, பின்பு திறக்கும் வசதியை தற்போது அறிமுகம் செய்துள்ளனர். அந்த வசதியை எப்படி பெறுவது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

வசதியை எப்படி பெறுவது:

  • ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள்  முதலில் https://uidai.gov.in/en/ என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு சென்று ‘My Aadhaar’ என்கிற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.  
  • இதையடுத்து ‘Aadhaar Services’ பிரிவின் கீழ் “Lock/Unlock Biometrics” என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • அதன் பின்னர் Login என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து,  ஆதார் எண் மற்றும் கேப்ட்சா வார்த்தையை பதிவு செய்ய வேண்டும்.
  • இதையடுத்து மொபைலுக்கு வரும் OTP மூலம் அதை உறுதி செய்து ‘Enable’ மற்றும் ‘Disable’ ஆப்ஷனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • நிரந்தரமாக நீக்குவதற்கு Block ஆப்ஷனை க்ளிக் செய்ய அறிவுறுத்தி உள்ளனர்.

மீண்டும் உயர் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பொன்முடி.., பொக்கே கொடுத்து வரவேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *