முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்ய போவதாக ஒரு தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக நேற்று முன்தினம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இதனால் நாடு முழுவதும் கண்டனம் மற்றும் போராட்டங்கள் வலுக்க தொடங்கினர். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று பல அரசியல் கட்சி தலைவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 6 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டதால் அவர் பதவியை ராஜினாமா செய்வாரா? என்று கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் இது குறித்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ” நான் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன், சிறையில் இருந்தபடியே அரசை வழி நடத்துவேன்” என்று கூறியுள்ளார்.