அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு
பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நாடு முழுவதும் தொடங்கி கிட்டத்தட்ட ஏழு கட்டங்களாக வருகிற ஜூன் 1ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கிறது. எனவே தேர்தலை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் சந்து இடுக்குகள் என ஒரு இடம் கூட விடாமல் பறக்கும் படையினர் சோதனை செய்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து அதிமுக சார்பாக தென்சென்னை தொகுதி வேட்பாளராக ஜெயவர்தன் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து உரிய அனுமதி பெறாமல் வேளச்சேரி காந்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி பேனர்களும் வைக்கப்பட்டுள்ளது. இதை காரணம் காட்டிய பறக்கும் படையினர் ஜெயவர்தன் மீதும், பொது கூட்டம் நடைபெற்ற மகால் உரிமையாளர் மீது பறக்கும் படையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.