தேனி தொகுதியில் TTV தினகரன் போட்டி. வரும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் திமுக தலைமையில் கூட்டணி, அதிமுக தலைமையில் கூட்டணி, பாஜக தலைமையில் கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என தமிழகத்தில் நான்கு முனைப்போட்டி நிலவுகிறது. இந்நிலையில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுகவிற்கு இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கபட்டன.
தேனி தொகுதியில் TTV தினகரன் போட்டி
JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS
தேனியில் TTV தினகரன் போட்டி :
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுக சார்பில் தேனி தொகுதியில் அந்த கட்சியின் தலைவர் TTV தினகரன் போட்டியிடப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் முன்னாள் முதல் ஓ.பன்னீர் செல்வம் தேனி தொகுதியில் போட்டியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் TTV தினகரன் போட்டியிடுவதால் தேனி தொகுதி கவனம் பெற்றுள்ளது.
தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக ! முக்கிய தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர் – அதிகாரபூர்வமாக அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி !
மேலும் தேர்தல் ஆணையம் அமமுகவிற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கியது. இந்நிலையில் தேனி தொகுதியில் போட்டியிடும் TTV தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.